இந்தியா

Peru || பெரு விமான விபத்து - 13 பேர் உயிரிழந்த சோகம்

Peru || பெரு விமான விபத்து - 13 பேர் உயிரிழந்த சோகம்

thanthitv

Peru || பெரு விமான விபத்து - 13 பேர் உயிரிழந்த சோகம் தென் அமெரிக்க நாடான பெருவின் புகழ்பெற்ற 'நாஸ்கா லைன்ஸ்' வரலாற்றுச் சின்னத்தைப் பார்வையிடச் சென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 13 பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். 'ஏரோடியானா' நிறுவனத்திற்குச் சொந்தமான சிறிய விமானம், சுற்றுலாப் பயணிகளுடன் வானில் பறக்க தொடங்கிய சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து நொறுங்கியது. இதில் இத்தாலியைச் சேர்ந்த 7 பேர், ஜெர்மனியைச் சேர்ந்த 2 பேர், ஸ்பெயினைச் சேர்ந்த 2 சுற்றுலா பயணிகள் மற்றும் 2 ஊழியர்கள் என 13 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் அவசரநிலை குறித்துக் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், விபத்துக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Minister VanniArasu | உள்ளே அமைச்சர் வன்னிஅரசு.. Landing ஆகாமல் வானிலே வட்டமடித்த Flight..

Breaking | Rain Alert | TN Rains | "கனமழை நீடிக்கும்.." | தமிழகமே எதிர்பார்த்த குட் நியூஸ்

Sivagangai Murder | சிவகங்கை இரட்டைக் கொ*ல விவகாரம் | 3 நாட்களுக்கு பிறகு உறவினர்கள் எடுத்த முடிவு

#BREAKING | Indian Cricket Team ``தங்கமே லட்சியம்.. வெள்ளி நிச்சயம்’’ - மரண மாஸ் காட்டிய இந்திய அணி

Youtuber Irfan | யூடியுபர் இர்ஃபான் கார் மோதி பெண் பலியான சம்பவம்..நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு