கேரள மாநிலம் கண்ணூர் விமான நிலையத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 100 கிலோவுக்கு மேல் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டு மட்டும் சுமார் 21 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பிலான 45 கிலோ தங்கமும், 2021 ஜனவரி முதல் மே மாதம் வரை 11 கோடியே 35 லட்ச ரூபாய் மதிப்பிலான 26 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2019ஆம் ஆண்டு 7 கோடி ரூபாய் மதிப்பிலான 21 கிலோ தங்கமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஊரடங்கு காலத்தில் மட்டும் 33 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தங்கம் கடத்தல் கும்பலுக்கு இடையே காணப்படும் போட்டி மற்றும் பொறாமை காரணமாக ரகசிய தகவல் அளித்ததன் பேரில் ஏராளமான தங்கம் பறிமுதல் செய்யப்படுவதோடு பலர் கைதாகி உள்ளனர்.