இந்தியா

ஜன.27, 28-ல் பி.சி.ஆர். பரிசோதனை - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா தகவல்

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.

தந்தி டிவி

பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் , மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவுறுத்தியுள்ளார்.இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் வருகிற 29-ஆம் தேதி தொடங்குகிறது . மாநிலங்களவை 9 மணி முதல் 2 மணி வரை நடைபெறும். மக்களவை 4 மணி முதல் இரவு 9 மணி வரை நடைபெறும். இது குறித்து டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மக்களவை, சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்துக்குள் கேண்டீன் இயங்காது என்றும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மட்டுமே உணவு வழங்கப்படும் என்றும் கூறினார். இந்த முறை கேள்வி நேரம் மற்றும் பூஜ்ஜியம் நேரம் உண்டு என கூறிய அவர், கேள்வி நேரம் ஒரு மணிநேரம் இருக்கும் என்றும் தெரிவித்தார். நாடாளுமன்ற வளாகத்திற்குள் ஜனவரி 27 ஆம் தேதி மற்றும் 28 ஆம் தேதி பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை