இந்தியா

நடிகர் பவன்கல்யாண் பிறந்த வாழ்த்து பதாகை வைத்த மூவர் பலி

பிரபல தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை ஒட்டி, பிளக்ஸ் வைக்க சென்ற ரசிகர்கள் 3 பேர் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தந்தி டிவி

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் சாந்திபுரம் பகுதியில் வசிக்கும், நடிகரும், ஜனசேன கட்சித் தலைவருமான பவன்கல்யாண்க்கு இன்று பிறந்த நாள் விழா. இதற்காக அவரது வீடு முன் பிளக்ஸ் வைப்பதற்காக சோக சேகர், அருணாசலம் மற்றும் ராஜேந்திரன் ஆகிய மூன்று ரசிகர்கள் அங்கு சென்றனர். 25 அடி உயர பிளக்சை கட்டும் பணியின் போது, மின் கம்பிகள் மீது உரசியது. மின்சாரம் தாக்கியதில், 3 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 3 பேர் சித்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்க்கப்பட்டு உள்ளனர். இச்சம்பவம் ரசிகர்களிடையே பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்