டெல்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தில், டெல்லி காவல்துறையும், என்.எஸ்.ஜியும் இணைந்து பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். அப்போது, நாடாளுமன்ற வளாகத்தில் ஹெலிகாப்டர் மூலம் என்.எஸ்.ஜி. படையினரும், டெல்லி போலீசாரும் இறங்கி ஒத்திகை மேற்கொண்டனர். மேலும், டெல்லியில் பல்வேறு பகுதிகளிலும் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. கடந்த வாரம் இதேபோன்று எஸ்எஸ்ஜி படையினர் மட்டும் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.