நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கருத்து தெரிவித்துள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தல், இந்த ஆண்டு இறுதியிலேயே நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சமீபத்தில் கூறியிருந்தார். இந்நிலையில், நாலந்தா திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கலந்து கொண்டார். அப்போது, மம்தா பானர்ஜியின் கருத்து குறித்து அவரிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, நாடாளுமன்ற தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படலாம் என தான் கடந்த ஏழு, எட்டு மாதங்களாக கூறி வருவதாக அவர் தெரிவித்தார்.