இந்தியா

வரும் 14ம் தேதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் - பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப காங்கிரஸ் முடிவு

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, வேலையிழப்பு, வேலையின்மை, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்ப காங்கிரஸ் முடிவு செய்துள்ளது.

தந்தி டிவி

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுக்கூட்டம், அதன் இடைக்கால தலைவர் சோனியா காந்தி தலைமையில் நடைபெற்றது. காணொலி மூலமாக நடந்த கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் மூத்த தலைவர்களான ஏ.கே.அந்தோணி, அகமது பட்டேல் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால், குலாம் நபி ஆசாத், ஜெய்ராம் ரமேஷ், அதிரஞ்சன் சவுத்ரி, மாணிக்கம் தாக்கூர் மற்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் காங்கிரஸ் சார்பில் எழுப்ப வேண்டிய விஷயங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா-சீனா எல்லை பிரச்சினை, வேலையிழப்பு, வேலையின்மை, கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்ப இந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்