இந்தியா

நாடாளுமன்ற தாக்குதல்.. லக்னோவிலிருந்து இறக்கிய மர்ம பொருள்.. வெளியான பகீர் தகவல்

தந்தி டிவி

மக்களவையில் வண்ணப்புகை குண்டுகளை வீசியது தொடர்பாக சாகர் ஷர்மா, மனோரஞ்சன் ஆகிய இருவரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் காலணிகள் மற்றும் சாக்ஸுகள் விசாரணைக்காக பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஷூக்களை மறைத்து வைத்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில், ஷூக்கள் மற்றும் சாக்ஸுகள் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இருவரும் பயன்படுத்திய காலணிகளில், ஒரு பொருளை மறைத்து வைக்கும் அளவுக்கு இடம் உள்ளதாகவும், அதில் ஒட்டிக்கொள்வதற்காக திரவியம் வைக்கப்பட்டது கண்டறியப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

சாகர் ஷர்மா லக்னோவில் ஆர்டர் செய்த காலணிகளுடன் காக்கி நிற சாக்ஸ் அணிந்திருந்தார். ஷர்மா குப்பிகளை பதுக்கி வைக்கும் காலணிகளை லக்னோவில் ஆர்டர் செய்ததாக கூறப்படுகிறது. இதனால், ஷர்மாவை போலீசார் லக்னோ அழைத்துச் சென்று, எந்த கடையில் இதனை ஆர்டர் செய்தார்? என்பது குறித்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு