இந்தியா

பொன்விழா கொண்டாடிய பாண்டியன் எக்ஸ்பிரஸ் - ரயில் பயணிகள் கேக் வெட்டி கொண்டாட்டம்

பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் பொன்விழா ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது.

தந்தி டிவி

மதுரை-சென்னை மற்றும் சென்னை-மதுரைக்கு கடந்த 1969-ஆம் ஆண்டிலிருந்து பயணம் மேற்கொண்டு வரும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் விரைவு ரயில் தனது பொன்விழாவை கொண்டாடியது. ரயில் ஆர்வலர்களால் முன்னின்று நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் அந்த ரயிலில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஓட்டுனர்கள், டிக்கெட் பரிசோதகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின், நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பாண்டியன் எக்ஸ்பிரஸ் மூத்த டிரைவர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்