இந்தியா

"பாக். ராணுவம், ஐஎஸ்ஐ பயிற்சி அளித்தது" - பாகிஸ்தான் தீவிரவாதி வாக்குமூலம்

இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற தீவிரவாதியைக் கைது செய்த இந்திய ராணுவம், தீவிரவாதி அளித்த வாக்குமூலத்தை வெளியிட்டுள்ளது.

தந்தி டிவி
வடக்கு காஷ்மீரின் பாகிஸ்தான் எல்லையை ஒட்டிய உரி பகுதியில் இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த அலி பாபர் பாத்ரா என்கிற தீவிரவாதியை இந்திய ராணுவம் நேற்று கைது செய்தது. இவருடன் சேர்ந்து 6 லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிகள் ஊடுருவ முயன்ற நிலையில் அவர்களை இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றது. இந்நிலையில் அலி பாபர் அளித்துள்ள வாக்குமூலம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தன்னுடைய வறுமையை பயன்படுத்தி பாகிஸ்தானின் ISI தன்னை மூளைச்சலவை செய்து லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத இயக்கத்தில் சேர வற்புறுத்தியதாக அலி பாபர் பாத்ரா தெரிவித்துள்ளார். மேலும், பாகிஸ்தான் ராணுவமும், ஐஎஸ் ஐ யும் சேர்ந்து தமக்கு பயிற்சி அளித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், கார்ஹி ஹபிபுல்லா என்ற இடத்தில் 3 வாரங்கள் பயிற்சி அளித்து ஆயுதம் வழங்கியதாகவும், 6 தீவிரவாதிகளை இந்தியாவிற்குள் ஊடுருவ அனுப்பியதாகவும் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்