India | Pakistan | United Nations | எல்லை மீறிய பாகிஸ்தான் - வார்னிங் கொடுத்த இந்தியா
#india #pakistan #unitednations #thanthitv
பாக். பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேச்சுக்கு இந்தியா கடும் கண்டனம் ஐ.நா. பொதுச்சபையில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பேசியதற்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், காஷ்மீர் விவகாரம் மற்றும் சிந்து நதி நீர் ஒப்பந்தம் குறித்து இந்தியாவுக்கு எதிராக பல்வேறு கருத்துகளை முன்வைத்தார். இதற்கு பதிலளித்த இந்தியா, காஷ்மீர் தொடர்பான பாகிஸ்தானின் கருத்துகளை திட்டவட்டமாக நிராகரித்ததுடன், எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை பாகிஸ்தான் ஆதரிப்பதாக குற்றம்சாட்டியது. மேலும், பயங்கரவாதத்திற்கு எதிராக தற்காப்பு நடவடிக்கைகளை இந்தியா தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும், பாகிஸ்தானின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு தகுந்த விளைவுகள் இருக்கும் என்றும் எச்சரித்துள்ளது.