பாரம்பரிய நெற்பயிர்கள் குறித்த விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் கேரள விவசாயி ஒருவர் பல்வேறு நெற்பயிர்களை கொண்டு புத்தர் சிலையை வடிவமைத்துள்ளார். நம்பிகொல்லி பகுதியை சேர்ந்த விவசாயி பிரசித்குமார், இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதனை சுற்றுவட்டார பகுதி மக்கள் ஆர்வமுடன் வந்து பார்த்து செல்கின்றனர்.