இந்தியா

ரயில் மூலம் ஆக்சிஜன் விநியோகம்; பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் சேர்ப்பு

139 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் எட்டாயிரத்து 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.

தந்தி டிவி

139 ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ரயில்கள் மூலம் எட்டாயிரத்து 700 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனை பல்வேறு மாநிலங்களுக்கு கொண்டு சேர்த்துள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது. தமிழ்நாட்டுக்கான இரண்டாவது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து 31.4 மெட்ரிக் டன் மருத்துவ ஆக்சிஜனுடன் சனிக்கிழமை காலை திருவள்ளூர் வந்து சேர்ந்தது. தமிழ்நாட்டுக்கு ரயில் மூலம் 111.4 மெட்ரிக் டன் ஆக்சிஜன் கிடைத்துள்ளது. 3-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் இருந்து 2-டேங்கர்களில் 40 டன் ஆக்சிஜனுடன் ஞாயிற்றுக் கிழமை தமிழகம் வருகிறது. 4-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ், ரூர்கேலாவில் இருந்தும், 5-வது ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ் ஒடிசா மாநிலம் கலிங்கநகர் டாடா தொழிற்சாலை ரயில்வே சரக்குப் பிரிவில் இருந்தும் கிடைக்க உள்ளது. கேரளா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம், ஹரியானா, தெலுங்கானா, ராஜஸ்தான் என பல்வேறு மாநிலங்களுக்கும் ஆக்சிஜன் அனுப்பியுள்ளதாக ரயில்வே நிர்வாகம் பட்டியலிட்டு உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்