மத்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்படும் அனைத்து நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை உடனடியாக மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அடுத்த உத்தரவு வரும் வரை நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்களை மூட மத்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது.