இந்தியா

கேரளாவில் அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

தந்தி டிவி

கேரள மாநிலத்தில் அடுத்த 5 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. நவம்பர் 24-ந்தேதி வரை சில இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தநிலையில், இடுக்கி, பத்தினம் திட்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டது.

இந்நிலையில் நேற்று மாலை திருவனந்துரம் மாவட்டத்திலுள்ள மலையோர பகுதியில் மழை வெளுத்து வாங்கியது. இதனால் திருவனந்தபுரம் - செங்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. குருபுழா முதல் இலவட்டம் வரை 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பிவிடப்பட்டன. பல வீடுகள் மற்றும் கடைகளுக்குள் மழைநீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்