இந்தியா

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

தந்தி டிவி

புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு - போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக, பெங்களூருவில் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது, போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.கர்நாடகாவில் தற்போது நடைபெற்று வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில், புதிய கல்விக்கொள்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும் என்ற கோரிக்கையுடன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். முதலில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள், பின்னர் தடையை மீறி, சட்ட மன்ற வளாகத்தை முற்றுகையிட முயன்றனர். அப்போது போலீசாருக்கும் மாணவர்களுக்கும் இடையே,தள்ளுமுள்ளு ஏற்பட்டு வன்முறை வெடித்தது. நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர போலீசார் போராட்டக்காரர்கள் மீது அதிரடியாக தடியடி நடத்தியதுடன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து அப்புறப்படுத்தினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்