போதைப்பொருள் விற்பனைக்கு எதிராக "Operation Wipe" - மத்திய அரசு அறிமுகம் இணையதளம் மற்றும் சமூக வலைதளங்கள் மூலம் மருந்துகளை போதைப்பொருளாக விற்பனை செய்யும் கும்பல்களுக்கு எதிராக ‘Operation WIPE“ என்ற நடவடிக்கையை போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் தொடங்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவில் செயல்படும் வர்த்தக இணையதளங்களில் சட்டவிரோதமாக மருந்துகள் விற்பனை செய்யப்பட்டதாக கண்டறிந்து, அவற்றை நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரை 122 சம்பவங்கள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 62 வகை மருந்துகள் தவறாக விற்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், சந்தேகத்திற்கிடமான தகவல்களை 1933 என்ற எண்ணில் தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.