இந்தியா

குண்டு வெடித்து வேட்பாளர் படுகாயம்

ஒடிசாவில் இரண்டு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

தந்தி டிவி
ஒடிசாவில் இரண்டு இடங்களில் நடைபெற்ற குண்டுவெடிப்புகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதில் காயமடைந்த பிஜூ ஜனதா தள வேட்பாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புவனேஸ்வர் மத்திய தொகுதியில் பிஜூ ஜனதா தள வேட்பாளராக, புவனேஸ்வர் நகர முன்னாள் மேயர் ஆனந்த் நாராயண் போட்டியிடுகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் பிரசார கூட்டத்தில் அவரது வாகனத்தில் குண்டு வீசப்பட்டது. இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக ஜெகன்நாத் பிரதான் போட்டியிடுகிறார். கட்சி அலுவலகம் அருகே நிறுத்தப்பட்டிருந்த அவரது வாகனத்திலும் குண்டு வெடித்துள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்த வேண்டும் என பாஜக, பிஜூ ஜனதா தளம் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ளன.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்