இந்தியா

ரூ.1260 கோடி மதிப்பில் புதிய ஐ.ஐ.டி பூங்கா - பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஐஐடி தொழிற்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார்.

தந்தி டிவி
ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில், பிரதமர் நரேந்திர மோடி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய ஐஐடி தொழிற்நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டினார். புவனேஸ்வருக்கு இன்று சென்ற பிரதமர் நரேந்திர மோடி, 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான, நலத்திட்டங்களை துவக்கி வைத்தார். அதன் படி, ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பிலான, ஐஐடி பூங்கா, 73 கோடி ரூபாய் இ.எஸ்.ஐ. மருத்துவமனை ஆகியவற்றுக்கு அடிக்கல் நாட்டினார். பின்னர் விழாவில் உரையாற்றிய பிரதமர் மோடி, புதிய ஐ.ஐ.டி பூங்கா மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்றார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்