இந்தியா

"மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களுக்கு ஏமாற்றம்" - பிரதமர் மோடி ஆவேசம்

தந்தி டிவி

வாக்கு ஜிகாத் அரசியலுக்காக மேற்கு வங்கத்தில் ஓபிசி மக்களை திரினாமூல் காங்கிரஸ் ஏமாற்றியுள்ளதாக பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கனாசில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், முஸ்லீம்களை சமரசம் செய்வதற்காக, ஓபிசி மக்களின் உரிமைகளை திரினாமூல் காங்கிரஸ் பறித்துள்ளதாக தெரிவித்தார். ஓபிசி மக்களுக்கு எதிராக திரினாமூல் காங்கிரஸ் இருப்பதை நீதிமன்றம் அம்பலப்படுத்தியுள்ளதாக கூறினார். ஓபிசி மக்களுக்கு அம்பேத்கர் கொடுத்த உரிமைகளில் திரினாமூல் காங்கிரஸ் விளையாடுவதாகவும், அதை, இரவு பகலும் அரசியலமைப்பு சட்டம் பற்றி பேசும் அனைவரும் வந்து பார்க்குமாறும் தெரிவித்தார். வங்காளத்தை முதலில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் கொள்ளையடித்த‌தாக தெரிவித்த பிரதமர் மோடி, இப்போது, திரினாமூல் காங்கிரஸ் இரு கரங்களால் கொள்ளையடித்து வருவதாக குற்றம் சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்