தேசிய குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள் தொகை பதிவேடுகளை அமல்படுத்த வேண்டாம் என 13 மாநில முதலமைச்சர்களுக்கு வேண்டுகோள் விடுத்திருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் சீத்தாராம் யெச்சூரி கூறியுள்ளார். ஹைதராபாத் ஒஸ்மானியா பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில், குடியுரிமை திருத்த சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக முழக்கம் எழுப்பப்பட்டது. பின் செய்தியாளர்களிடம் பேசிய சீத்தாராம் யெச்சூரி, என்.ஆர்.சி.யை அமல்படுத்த மாட்டோம் என ஏற்கனவே அறிவித்த முதலமைச்சர்களிடம் வேண்டுகோள் விடுத்திருப்பதாக கூறினார். மேற்கு வங்க மக்களின் கொந்தளிப்புக்கு மம்தா பானர்ஜியும் அவரது கட்சியும்தான் பொறுப்பு என்ற அவர், அது பாஜகவுக்கு சாதகமாகி விட்டது என்றார்.