கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பின்னர், இந்திய பொருளாதாரத்தை மீட்க தூய்மையான எரிசக்தி அவசியமாகும் என மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக நிதிஆயோக் அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வில், போக்குவரத்து மற்றும் மின்சாரக் கட்டமைப்புகளில் இந்தியா புதிய வாய்ப்புகளை நாட வேண்டும் என கூறியுள்ளது. பொருளாதார மீட்க, தூய்மையான எரிசக்தி அவசியம் என்றும் நிதி ஆயோக் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.