இந்தியா

பாலியல் புகார் வழக்கில் நித்யானந்தாவுக்கு கைது வாரண்ட்

பாலியல் புகார் தொடர்பான வழக்கில் நித்தியானந்தாவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து கர்நாடக மாநிலம் ராம்நகர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

நித்யானந்தா எதிராக அவரது ஆசிரமத்தில் இருந்த லெனின் கருப்பன் மற்றும் ஆர்த்தி ராவ் ஆகியோர் தொடர்ந்த பாலியல் வழக்கு ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் நித்தியானந்தாவின் ஜாமீன் மனுவை ரத்து செய்வதாகவும், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற முடியாது எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில் பாலியல் புகார் வழக்கில் ஜாமீன் ரத்து செய்யப்பட்டதற்கான உத்தரவு நகலை கர்நாடக சிஐடி போலீஸார் ராம்நகர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். இதைத் தொடர்ந்து ராம்நகர் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் நித்தியானந்தாவுக்கு கைது வாரண்ட்டை பிறப்பித்தது. மேலும் அவரை பிடிக்க இண்டர்போல் உதவியை நாடவும், இதற்காக ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை