இந்தியா

அமெரிக்க நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தடை - பெங்களூர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

ஆர்த்தி ராவ் மீது நித்யானந்தா தரப்பு தொடர்ந்த மானநஷ்ட வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த பெங்களூர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

தந்தி டிவி

நித்யானந்தா மீது ஆர்த்தி ராவ் தொடர்ந்த பாலியல் வழக்கு ராம்நகர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில் அமெரிக்காவில் உள்ள நித்தி ஆசிரமம் சார்பில், ஆர்த்தி ராவுக்கு எதிராக கொலம்பஸ் நகர நீதிமன்றத்தில் 2013ஆம் ஆண்டு மானநஷ்ட வழக்கு தொடரப்பட்டது. காப்புரிமை பெற்ற யோகாசன கலைகளை சட்டவிரோதமாக பயன்படுத்தும் ஆர்த்திராவ், 3 கோடியே 30 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு தருமாறு கோரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு ஆர்த்தி ஆஜராகததால், நித்தியானந்தாவுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கப்பட்டது. இதை அமல்படுத்தி நஷ்ட ஈடு தொகையை பெற்றுத் தர உத்தரவிடக் கோரி பெங்களூர் நீதிமன்றத்தில் நித்தியானந்தா தரப்பு முறையிட்டது. இதுதொடர்பான இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், அமெரிக்க தீர்ப்பை செயல்படுத்த தற்காலிக தடை விதித்து உத்தரவிட்டது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்