இந்தியா

"பண்டிகை காலத்தையொட்டி வங்கி கடனுதவி" - மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்

பண்டிகை காலத்தையொட்டி நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்ப் கூட்டங்கள் நடத்தப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த கலந்தாய்வு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற அந்த கூட்டத்தில் அனைத்து பொதுத்துறை

வங்கிகளின் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வங்கிகள் , வாடிக்கையாளர்கள் மற்றும் சிறு குறு நிறுவனங்களுக்கு கடனுதவிகளை அளிப்பதை மேலும் அதிகரிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டார்.

வங்கிகள் அல்லாத நிதிநிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும், வாடிக்கையாளர்களுக்கு கடனுதவி அளிக்கவும் நாடு முழுவதும் 400 மாவட்டங்களில் வங்கி கடனுதவி வழங்குவதற்கான சிறப்பு கூட்டங்கள் நடத்தப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். நிதி நெருக்கடியில் உள்ள சிறு, குறு நிறுவனங்கள் செலுத்த வேண்டிய கடன் தொகையை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை வாராக்கடனில் சேர்க்க வேண்டாம் என்று நிர்மலா சீதாராமன் கேட்டு கொண்டார்.

TVK Vijay | "அதுஎவ்ளோ பெரிய பொய்" - குண்டை தூக்கி போட்ட டி.வி.சோமு

Sivaganga | மானாமதுரை பயங்கர சம்பவம்.. ரவுடியை சுட்டு பிடித்த போலீசார்

TVK Vijay | "அத மட்டும் மன்னிக்க மாட்டாங்க" - பகீர் கிளப்பிய சுபேர்

Kovai Judgement தீர்ப்பு வழங்கும் சில மணித்துளிக்கு முன் கோவை கொடூரன்கள் நீதிபதியிடம் வைத்த கோரிக்கை

Kovai Case Judgement கோவை மாணவி கூட்டு பலாத்கார வழக்கு - `3 கொடூரர்கள்’.. தெளிவாக அறிவித்த நீதிபதி