இந்தியா

பேராசிரியை நிர்மலாதேவிக்கு இன்று குரல் மாதிரி பரிசோதனை

குரல் மாதிரி பரிசோதனைக்காக சென்னை அழைத்து வரப்பட்ட பேராசிரியை நிர்மலா தேவி சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தந்தி டிவி

கல்லூரி மாணவிகளை தவறாக வழி நடத்த முயன்றதாக அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார்.

மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிர்மலா தேவிக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்த, உயர் நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது. இதையடுத்து, நிர்மலா தேவிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் இன்று குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட உள்ளது.

இதற்காக, மதுரை சிறையிலிருந்து நிர்மலாதேவியை நேற்று சென்னை அழைத்து வந்த சிபிசிஐடி போலீசார், புழல் சிறையில் அடைத்தனர். இன்று அவருக்கு குரல் மாதிரி பரிசோதனை நடத்தப்பட்ட பிறகு, மீண்டும் மதுரை அழைத்து சென்று நாளை சிறையில் அடைக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்