இந்தியா

உதவி பேராசிரியை நிர்மலா தேவி விவகாரம்: "விசாரணை அறிக்கை வெளியிட தாமதம் ஏன்?"

உதவி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் குறித்து, சந்தானம் குழு நடத்திய விசாரணை அறிக்கை வெளியாவதில், சிக்கல் நீடிக்கிறது.

தந்தி டிவி

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லுாரியைச் சேர்ந்த உதவி பேராசிரியை நிர்மலா தேவி, தவறான பாதைக்கு அழைத்து செல்லும் நோக்கில் மாணவிகளுடன் பேசிய தொலைபேசி உரையாடல் பெரும் பரபரப்பை ஏற்படத்தியது.

இது தொடர்பான புகாரின் பேரில் ஏப்ரல் 16 ம் தேதி நிர்மலா தேவி கைது செய்யப்பட்டார். மதுரை காமராஜர் பல்கலைக்கழக முன்னாள் ஆராயச்சி மாணவர் கருப்பசாமி மற்றும் உதவி பேராசிரியர் முருகன் ஆகியோரும் கைது செய்யப்பட்டு, மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். பின்னர், இவ்வழக்கு சிபிசிஐடி போலீசாருக்கு மாற்றப்பட்ட நிலையில், அவர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விவகாரத்தில் அரசின் உயர் பொறுப்புகளில் உள்ளவர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என கூறப்பட்ட நிலையில், ஆளுநர் பன்வாரி லால் புரோகித், ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சந்தானத்தை விசாரணை அதிகாரியாக நியமித்தார்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், அருப்புக்கோட்டை தனியார் கல்லுாரி உள்ளிட்ட இட​ங்களில் விசாரணை நடத்திய சந்தானம் குழு, மே 14 ல், ஆளுநரிடம் அறிக்கையை வழங்கியது. ஆனால், அதற்கு முன்னதாக மே 10 ம் தேதியே, அறிக்கையை வெளியிட, சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

தற்போது வரை தடை நீடிக்கும் நிலையில், அதனை வெளியிட தேவையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள், பேராசிரியர்கள், அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சந்தானம் குழுவின் விசாரணை அறிக்கையில், பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே, நீதிமன்றத்தின் அனுமதியை பெற்று விசாரணை அறிக்கையை பகிரங்கமாக வெளியிட வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி