இந்தியா

"4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர்" - திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தகவல்

திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை.

தந்தி டிவி

திகார் சிறையில் ஒரே நேரத்தில் 4 பேருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது இதுவே முதல் முறை. முகேஷ் குமார், பவன் குமார் குப்தா, வினய் குமார் சர்மா, அக்‌ஷய் குமார் ஆகிய 4 பேரும் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்ததாக திகார் சிறை இயக்குநர் சந்தீப் கோயல் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து, திகார் சிறை வளாகத்துக்குள் சென்ற ஹரி நகர் காவல் ஆய்வாளர் 4 பேரின் சடலங்களை தீனதயாள் உபாத்தியாயா மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு, உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகளின் உறவினர்களிடம் சடலம் ஒப்படைக்கப்படும் என சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதைத் தொடர்ந்து, நிர்பயா குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றி விட்டோம் என்ற அறிக்கையை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில், திகார் சிறை நிர்வாகம் இன்று தாக்கல் செய்கிறது.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி