இந்தியா

"நிர்பயா குற்றவாளிகள் மனு தள்ளுபடி" - டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவு

திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக நிர்பயா குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுவை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

தந்தி டிவி

நிர்பயா வழக்கு குற்றவாளிகள், வினய்குமார், முகேஷ் சிங், அக்‌ஷய் குமார், பவன் சிங் ஆகியோருக்கு பிப்ரவரி ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இந்நிலையில், திகார் சிறை அதிகாரிகளுக்கு எதிராக, நிர்பயா குற்றவாளிகள் டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனு இன்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சீராய்வு, கருணை மனுக்கள் தாக்கல் செய்வதற்கான ஆவணங்களை திகார் சிறை அதிகாரிகள் வழங்கவில்லை என குற்றவாளிகள் தரப்பில் முறையிடப்பட்டது. இதை மறுத்த டெல்லி காவல்துறை தரப்பு, தண்டனையை தாமதப்படுத்த முயற்சி நடப்பதாக வாதம் செய்தது. வாதங்களை கேட்டறிந்த டெல்லி நீதிமன்றம், நிர்பயா குற்றவாளிகள் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்