இந்தியா

News | Police | பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்..! தேசிய அளவில் பரபரப்பு

பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்..! தேசிய அளவில் பரபரப்பு

thanthitv, devops

News | Police | பிரபல செய்தி நிறுவனத்திற்கு சீல்..! தேசிய அளவில் பரபரப்பு #News #Police #Media #Press #UNI டெல்லி ரஃபி மார்க் பகுதியில் இயங்கி வரும் 'யு.என்.ஐ' (UNI) செய்தி நிறுவன அலுவலகத்திற்கு போலீசார் சீல் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 1979-ஆம் ஆண்டு அலுவலகம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்தில், 40 ஆண்டுகளாகக் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்படாததால், அந்த நில ஒதுக்கீட்டை நில மேம்பாட்டு ஆணையம் ரத்து செய்தது. இதனை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், நில ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை டெல்லி உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. நீதிமன்ற உத்தரவின்படி காவல்துறையினர் அலுவலகத்தை மூடி ஊழியர்களை அப்புறப்படுத்தினர். ஆனால், இந்த நடவடிக்கையின் போது ஊழியர்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாகக் குற்றம் சாட்டியுள்ள செய்தி நிறுவனம், இது ஊடக சுதந்திரத்தின் மீதான தாக்குதல் எனத் தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் டெல்லி பத்திரிகையாளர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..

TN Weather Update| மெல்ல மெல்ல பவர் ஏறும் புது சிஸ்டம்.. 5ம் தேதி வரை தமிழகத்திற்கு கன்பார்ம்