இந்தியா

தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது

தந்தி டிவி

சென்னையில் உதயமானது, 3-வது ரெயில் முனையம் : தாம்பரம் - நெல்லை இடையே முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவை துவக்கம்

சென்னை - மாநகரின் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க, சென்ட்ரல் , எழும்பூர் முனையங்களை தொடர்ந்து, 3 - வது ரெயில் முனையமாக தாம்பரம் உதயமாகி உள்ளது. இந்த புதிய ரெயில் முனையத்தை மத்திய ரெயில்வே

அமைச்சர் ராஜென் கோஹைய் துவக்கி வைத்தார். மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தாம்பரம் - நெல்லை இடையே அந்யோதயா என்ற முன்பதிவில்லாத புதிய ரெயில் சேவையை, மத்திய அமைச்சர் ராஜென் கோஹைன், கொடி அசைத்து துவக்கி வைத்தார். இந்த புதிய ரெயில், தாம்பரத்தில் இருந்து தினமும் இரவு 12.30 மணிக்கு புறப்பட்டு, விழுப்புரம் - மயிலாடுதுறை - தஞ்சை - திருச்சி - திண்டுக்கல் - மதுரை - விருதுநகர் வழியாக பிற்பகல் 3.30 மணிக்கு, நெல்லை சென்று சேரும். மறு மார்க்கத்தில், இந்த ரெயில், நெல்லையில், மாலை 5.30 மணிக்கு புறப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்