சட்டைப் பையில் இருந்த புதிய செல்போன் வெடிப்பு - இளைஞர் காயம் உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டா அருகே, சட்டைப் பையில் வைத்திருந்த புதிய செல்போன் திடீரென வெடித்ததில் இளைஞர் ஒருவர் காயமடைந்துள்ளார். பிபால்கா கிராமத்தைச் சேர்ந்த மஜித் என்பவர், தனது சட்டைப் பையில் புதிய செல்போனை வைத்திருந்ததாக கூறப்படுகிறது. எதிர்பாராத விதமாக செல்போன் திடீரென வெடித்ததில், அவரது இரு கைகளிலும் உடலின் கீழ்ப்பகுதியிலும் தீக்காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.