இந்தியா

நீட் தேர்வு முடிவு - புதிய பட்டியல் வெளியீடு

நீட் தேர்வு முடிவுகளில், ஐந்து மாநில புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி

நீட் தேர்வு முடிவுகளில், ஐந்து மாநில புள்ளி விவரங்களில் திருத்தம் செய்யப்பட்டு, புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், சில மாநிலங்களில், தேர்வு எழுதியவர்களை விட தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக சர்ச்சை எழுந்தது. திரிபுரா மாநிலத்தில் நீட் தேர்வு எழுதியவர்கள் 3 ஆயிரத்து 536 பேர் என்ற நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் 88 ஆயிரத்து 889 பேர் என பட்டியலில் முடிவு வெளியானது. மேலும், உத்தரகண்ட் மாநிலத்தில் நீட் எழுதியவர்கள் 12 ஆயிரத்து 47 பேர் என்ற நிலையில், தேர்ச்சி பெற்றவர்கள் 37 ஆயிரத்து 301 பேர் என்றும், தெலுங்கானாவில் 50 ஆயிரத்து 392 பேர் தேர்வு எழுதிய நிலையில், ஆயிரத்து 738 பேர் மட்டுமே தேர்ச்சி என்றும் தேர்வு முடிவில் கூறப்பட்டிருந்தது.

இந்த குளறுபடிகளைத் தொடர்ந்து, நீட் தேர்வு முடிவு பட்டியலை இணையதளத்தில் இருந்து தேசிய தேர்வு முகமை நீக்கியது. பின்னர் திருத்தப்பட்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய பட்டியலின்படி, தேர்ச்சி பெற்றவர்கள் திரிபுராவில் ஆயிரத்து 738, உத்தரகண்ட் மாநிலத்தில் 7 ஆயிரத்து 323, தெலுங்கானாவில் 28 ஆயிரத்து 93 பேர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுபோன்ற குளறுபடிகளுக்கு, திருத்தப்பட்ட பட்டியலில் தீர்வு காணப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி