கொச்சி ஐ.என்.எஸ். கருடா விமானப் படைத் தளத்தில் இருந்து இன்று காலை 7 மணிக்கு பயிற்சிக்கு புறப்பட்ட கிளைடர் விமானம், சிறிது நேரத்திலேயே விபத்துக்கு உள்ளாகி தொப்பம்பாடி பாலம் அருகே விழுந்துள்ளது. இந்த விபத்தில் உயிரிழந்த 39 வயதான லெப்டினட் ராஜீவ், உத்தராக்கண்ட் மாநிலத்தையும், 29 வயதான சுனில்குமார் பீகார் மாநிலத்தையும் சேர்ந்தவர்கள். ராஜீவ்க்கு திருமணமாகி இரண்டு குழந்தை உள்ளதும், சுனில் குமாருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிளைடர் விபத்து குறித்து தென் மண்டல கடற்படையும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.