சென்னையில் உள்ள தேசிய பெருங்கடல் தொழில்நுட்ப நிறுவனத்தின் இயக்குனர் எம்.ஏ. ஆத்மானந்துக்கு பெருங்கடல் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நிலவியல் துறையில் சிறந்த பங்களிப்பு செய்து வரும் பேராசிரியர் அசோக் சாஹினிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படுகிறது. விசாகப்பட்டினம் தேசிய பெருங்கடல் ஆய்வு நிறுவனத்தின் மூத்த முதன்மை விஞ்ஞானி டாக்டர் வி.வி.எஸ்.எஸ்.சர்மாவுக்கும் , கோவா தேசிய துருவ மற்றும் பெருங்கடல் ஆய்வு மையத்தின் இயக்குனர் டாக்டர் எம். ரவிச்சந்திரன் ஆகியோருக்கு பெருங்கடல் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான தேசிய விருது வழங்கப்பட உள்ளது. திருவனந்தபுரம் விஎஸ்எஸ்சி விஞ்ஞானி டாக்டர் சுரேஷ் பாபுவுக்கு, வளி மண்டல அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. வாரணாசி இந்து பல்கலைக்கழகத்தின் நிலவியல் துறை சார்ந்த திரு என்.வி.சலபதிராவுக்கு, நில அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் தேசிய விருதும், பெண் விஞ்ஞானிக்கான அன்னா மானி விருது, கோவா தேசிய பெருங்கடல் அறிவியல் நிறுவனத்தின் மூத்த விஞ்ஞானி டாக்டர் லிடியா டி.எஸ்.கண்டேபார்கருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.