2019 ஆண்டில், ஒரே ஒரு டாடா நானோ கார் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மிகக் குறைந்த விலை கார் என டாடா நிறுவனத்தால் அறிமுகம் செய்யப்பட்ட நானோ கார் விற்பனை தொடர்ச்சியாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் 297 நானோ கார்கள் மட்டுமே விற்பனை ஆன நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஒரு கார் விற்பனை செய்யப்பட்டுள்ளது. விற்பனை குறைந்தாலும், நானோ கார் உற்பத்தியை நிறுத்துவது குறித்து டாடா நிறுவனம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும், அடுத்த ஆண்டு முதல் நானோ கார் விற்பனை நிறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.