இந்தியா

மைசூரூ தசரா விழா : விமர்சையாக நடத்தப்பட்ட "யானை அம்பாரி" ஊர்வலம்

கர்நாடக மாநிலம் மைசூருவில் நடைபெற்ற யானை அம்பாரி ஊர்வலத்தை பல்லாயிரகணக்கானோர் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

தந்தி டிவி

மைசூருவில் கடந்த 10 ஆம் தேதி துவங்கிய தசரா விழாவின் முக்கிய

நிகழ்வான யானை அம்பாரி ஊர்வலத்தை கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி துவக்கி வைத்தார்.

அரண்மனையில் துவங்கிய ஊர்வலத்தில், 750 கிலோ எடை கொண்ட அம்பாரியுடன், அலங்கரிக்கப்பட்ட யானைகள் முன்னே நடந்து செல்ல, அதன் பின்னால் கர்நாடக மாநில பெருமைகளை பறைசாற்றும் வகையில் ஊர்திகள் அணிவகுத்து சென்றன. 5 கிலோ மீட்டர் தூரம் வரை பயணித்து, இந்த ஊர்வலம் வன்னி மண்டபம் அருகே நிறைவடைந்தது. இதனை பல்லாயிரக்கணக்கானோர் பார்த்து ரசித்தனர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்