இந்தியா

ஆந்திரா|கடப்பா அமீன் பீர் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வழிபாடு

கடப்பா அமீன் பீர் தர்காவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வழிபாடு

thanthitv

ஆந்திர மாநிலம் கடப்பாவில் உள்ள அமீன் பீர் தர்காவில் நடைபெற்ற உருஸ் உற்சவம் மற்றும் சந்தனக்கூடு திருவிழாவில், பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்று வழிபாடு நடத்தினார்.

அமீன் பீர் தர்காவில் ஆண்டுதோறும் நடைபெறும் உருஸ் உற்சவத்தின் ஒரு பகுதியாக, நேற்று இரவு சந்தனக்கூடு திருவிழா நடைபெற்றது. இதில் பங்கேற்க வந்த ஏ.ஆர். ரஹ்மானை, தர்கா நிர்வாகிகள் மாலை அணிவித்து வரவேற்றனர்.

தொடர்ந்து, தர்காவில் மலர் போர்வையைச் சமர்ப்பித்து, அவர் தொழுகையில் ஈடுபட்டார். ஆண்டுதோறும் இந்த விழாவில் ஏ.ஆர். ரஹ்மான் பங்கேற்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது.

அவரைக் காண நூற்றுக்கணக்கான ரசிகர்கள் தர்கா வளாகத்தில் திரண்டதால், தர்கா மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

CM Vijay Chembarampakkam visit| ஒரு மார்க்கமாக இருக்கும் சென்னை வானிலை - வண்டியை விடும் CM விஜய்

Accident பலியான கிளீனர்.. 40 பயணிகளுக்கு நேர்ந்த நிலை? உருக்குலைந்த பேருந்து.. விரைந்த 15 ஆம்புலன்ஸ்

Gingee Girl Missing Update|சிறுமி குறித்து தெரிந்த `புது' தகவல்..இத தான CBCID-யும் எதிர்பார்த்தது..!

Kodaikanal கொடைக்கானலில் சரித்துவிட்ட முரட்டு மழை - திபுதிபுவென உருண்டு விழுந்த பாறை கற்கள்

Cyclone புயல் ரூபமெடுத்த `அர்னாப்’.. கூடவே இன்னொரு `சிஸ்டம்’? தமிழகத்தில் வீரியம் எப்படி இருக்கும்..