இந்தியா

மும்பையில் 24 மணி நேரத்தில் 824 பேருக்கு தொற்று உறுதி...

மும்பையில் கடந்த 40 நாட்களில் இல்லாத அளவாக நேற்று 824 பேருக்கு மட்டுமே தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி

மும்பையில் கடந்த 24 மணி நேரத்தில் 824 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இது கடந்த 40 நாட்களை ஒப்பிடுகையில் குறைவானது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று மட்டும் 107 பேர் பலியான நிலையில், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மும்பையில் மூவாயிரத்து 844 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 68 ஆயிரத்து 140 ஆக உயர்ந்துள்ள நிலையில், 29 ஆயிரத்து 982 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மும்பை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்று அம்மாநிலத்தில் புதிதாக மூவாயிரத்து 214 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 39 ஆயிரத்து 10 ஆக உள்ளது. இதில் 62 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை பெற்று வருவதாக மகாராஷ்டிர சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. அறிகுறி உள்ளவர்களுக்கு மட்டுமே கொரோனா சோதனை நடத்தப்படுகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்