இந்தியா

"தோனி ஓய்வு - 130 கோடி பேரின் மனமும் வருத்தம்" - பிரதமர் மோடி

பிரபல கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனிக்கு, பிரதமர் மோடி புகழாரம் சூட்டி கடிதம் எழுதியுள்ளார்.

தந்தி டிவி

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதன் மூலம், 130 கோடி மக்களின் மனதையும் வருத்தப்பட வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

* வெற்றி கேப்டனாக வலம் வந்துள்ளீர்கள் என கூறியுள்ள பிரதமர் மோடி, உலக அளவில் இந்திய அணியின் பெயரை உச்சத்துக்கு எடுத்துச் சென்றதாக புகழாரம் சூட்டியுள்ளார்.

* தோனியை ஒரு விளையாட்டு வீரராக மட்டும் பார்க்க முடியாது என்று கூறும் பிரதமர் மோடி, அனைத்து விதத்திலும் நேர்த்தியான மனிதர் தோனி என புகழாரம் சூட்டியுள்ளார்.

* ஆட்டத்தை முடித்து வைக்கும் பாணி, அனைவரும் கவர்ந்த ஒன்று என சுட்டிக்காட்டும் மோடி, யாராலும் 2011ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியை மறக்க முடியாது என்று கூறியுள்ளார்.

* புதிய இந்தியாவை உருவாக்கும் முக்கியமான கருவி தோனி என்றும், குடும்பப் பெயரை தாங்கி உயர்வதை விட, சொந்தப் பெயரை உயர்த்தியதாக தோனியை கூறியுள்ளார்.

* கலைஞர்கள், ராணுவ வீரர், விளையாட்டு வீரர் விரும்புவது, உழைப்புக்கான அங்கீகரிப்பதை மட்டும்தான் என்று கூறியுள்ள தோனி, அங்கீகரித்து பாராட்டியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்