இந்தியா

தாய்மொழியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி 20,000 கி.மீ. சைக்கிள் பயணம்

தாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

தந்தி டிவி

தாய் மொழியின் முக்கியத்துவத்துவம் பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த 29 வயதான கந்தார் குல்கர்னி, 20 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவுக்கு நாடு முழுவதும் சைக்கிள் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். கடந்தாண்டு ஜூலை முதல் தேதி தொடங்கிய சைக்கிள் பிரசாரத்தை வரும் ஆகஸ்ட் 15 ஆம் தேதி நிறைவு செய்ய உள்ளதாக சிலிகுரியில் செய்தியாளர்களிடம் பேசிய குல்கர்னி தெரிவித்துள்ளார். பல்வேறு தேசிய மற்றும் மாநில மொழிகள் குறித்து வெளிச்சத்துக்கு கொண்டு வருவதே தமது பயணத்தின் நோக்கம் என்றும் அவர் கூறியுள்ளார். தாய் மொழியின் வலிமை என்ன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்துள்ளேன் என்றும், நம்முடைய கருத்து முக்கியமானது என்றும், அதனை மேம்படுத்துவதில் தாய் மொழியின் பங்கு முக்கியமானது என்றும் குல்கர்னி தெரிவித்துள்ளார். தாய் மொழியில் ஒருவருக்கு உள்ள குறைபாடு கேள்விக்குரியது என்றும், ஆங்கிலம் ஒருவருக்கு தேவை தான், ஆனால் அதேநேரத்தில் மாநில மற்றும் தேசிய மொழியை குறைத்து மதிப்பிடக் கூடாது என்றும் குல்கர்னி தெரிவித்துள்ளார்.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்