இந்தியா

பண மோசடி புகார் - நடிகை சன்னி லியோனியிடம் விசாரணை

29 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோனியிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

தந்தி டிவி

29 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்ததாக எழுந்த புகாரில் பிரபல இந்தி நடிகை சன்னி லியோனியிடம் கொச்சி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர். கொச்சி உள்ளிட்ட நகரங்களில் நிகழ்ச்சிகள் நடத்தும் அமைப்பை நடத்தி வரும் ஆர்.ஷியாஸ் என்பவர், அம்மாநில டி.ஜி.பி.யிடம் அளித்த புகாரின் பேரில் இந்த நடவடிக்கை என கூறப்படுகிறது. சன்னி லியோனியிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படை​யில், ஷியாசிடம் மேலும் தகவல்களை பெற்று விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். நிகழ்ச்சிகளில் பங்கேற்க தேதி கொடுத்து, அதற்கான பணம் பெற்றுக் கொண்டதாகவும், ஆனால், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அதனை முறையாக பயன்படுத்தவில்லை என சன்னி லியோன் தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்