இந்தியா

Modi | UCC| ``ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. பொது சிவில் சட்டம்’’ - பிரதமர் முக்கிய அறிவிப்பு

``ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. பொது சிவில் சட்டம்’’ - பிரதமர் முக்கிய அறிவிப்பு

thanthitv

``ஒரே நாடு.. ஒரே தேர்தல்.. பொது சிவில் சட்டம்’’ - பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு

ஒரே நாடு ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் குறித்து பிரதமர் மோடி முக்கிய அறிவிப்பு பாரதிய ஜனதா கட்சியின் 47-வது ஆண்டு தொடக்க விழாவை ஒட்டி, வீடியோ கான்ஃபெரன்ஸிங் வாயிலாக தொண்டர்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, தேசத்தை வலுப்படுத்துவதில் கட்சியின் சாதனைகளை விரிவாகப் பட்டியலிட்டார். அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம், முத்தலாக் தடைச் சட்டம் மற்றும் புதிய நாடாளுமன்றக் கட்டடம் எனப் பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கற்களை எட்டியதாக அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ மற்றும் ‘பொது சிவில் சட்டம்’ ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது குறித்து நாடு முழுவதும் தற்போது ஆக்கபூர்வமான விவாதங்கள் நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்தார். பிரிட்டிஷ் காலத்தில் நடைமுறைப்படுத்த தேவையற்ற சட்டங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளோம் எனக் குறிப்பிட்ட பிரதமர், வளர்ந்த மற்றும் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதே தங்களின் இறுதி இலக்கு என்றும், அதற்கான பணிகள் தொடர்ந்து தொய்வின்றி நடைபெறும் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்