#bjpmla #bjpmlacar
உத்தரபிரதேச மாநிலம் புலந்த்ஷாஹரில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில், டிபாய் தொகுதி பாஜக எம்எல்ஏ சந்திர பால் சிங் லோதியின் கார் விபத்துக்குள்ளானதில், அவர் பலத்த காயமடைந்தார். லண்டோனில் இருந்து திரும்பியபோது, புடா கபூல்பூர் கிராமம் அருகே கனமழையால் சாலையில் தண்ணீர் தேங்கியிருந்த நிலையில், காரின் டயர் வெடித்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர மின்கம்பத்தில் மோதியது. எம்எல்ஏவுடன் இருந்த பாதுகாவலர் மற்றும் ஓட்டுநருக்கும் காயம் ஏற்பட்ட நிலையில், முதலில் ஹாபூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.