இந்தியா

புதுச்சேரியில் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது.

தந்தி டிவி

தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும், பால் விலை உயர்ந்துள்ளது. பேரவையில் இதற்கான அறிவிப்பை, முதலமைச்சர் நாராயணசாமி வெளியிட்டுள்ளார். அதன்படி, புதுச்சேரி பாண்லே பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது. ஒரு லிட்டர் பால் 42 ரூபாயில் இருந்து 48 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல், பால் கொள்முதல் விலையும் 6 ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கொள்முதல் விலையானது, 30 ரூபாயில் இருந்து 36 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வானது, நாளை வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் என்று நாராயணசாமி குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்