புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலையில், பீகார் மாநிலம், முசாபர்பூர் ரயில் நிலையம் வந்தவர்கள் போதிய போக்குவரத்து வசதி இல்லாமல் அவதி அடைந்தனர். பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சிறப்பு ரயில்கள் மூலம் வந்த தொழிலாளர்களுக்கு போதிய பேருந்து வசதி செய்யப்படவில்லை என்பதால், சமூக இடைவெளி இன்றி கூட்டம் அலைமோதியது. பேருந்துகளில் மக்கள் நெருக்கி அடித்து நின்றதுடன், மேற்கூரையில் அமர்ந்தும் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டது.