இந்தியா

மேகதாது அணை கட்டுவதில் கர்நாடகா உறுதி - அமைச்சர் சிவகுமார்

காவிரியில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளதாக அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி

* காவிரியில் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவதில் கர்நாடக அரசு உறுதியாக உள்ளதாக அம்மாநில நீர்வளத் துறை அமைச்சர் டி.கே.சிவகுமார் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் சண்டையிட விரும்பவில்லை என்றும் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* இந்த திட்டம் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கை மற்றும் முக்கிய முடிவுகள் குறித்து தீர்மானிக்க அவசர ஆலோசனை கூட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் டிசம்பர் 6ம் தேதி நடைபெறும் இந்த கூட்டத்தில், முன்னாள் முதலமைச்சர்கள், முன்னாள் நீர்வள அமைச்சர்கள், நீர்வள அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில், கர்நாடக அரசு சார்பாக, விரிவான திட்ட வரைவு அறிக்கையை சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்