மேகாலயாவில் ஏப்ரல் 15ம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ள நிலையில், ஏப்ரல் 30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேகலாயா அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது கொரோனா நோய் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி நீட்டிப்பது என முடிவெடுக்கப்பட்டது.