இந்தியா

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை - இரவு நேர ஊரடங்கை அறிவித்த கேரள முதல்வர்

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கேரளாவில் மீண்டும் வார இறுதி நாள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது.

தந்தி டிவி

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கேரளாவில் மீண்டும் வார இறுதி நாள் மற்றும் இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வந்துள்ளது. ஓணம் உள்ளிட்ட பண்டிகைகளால் கடந்த இரு வாரங்களாக கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதனால் கேரளாவில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது. இந்த நிலையில் இரவு நேரம் மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கை அமல்படுத்த முதலமைச்சர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி இன்று முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. வாரத்தின் மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஊடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் அவரசர தேவைக்கு மட்டுமே மக்கள் வெளியே செல்ல வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைக்கான கடைகளும், கொரோனா தொடர்பான துறைகள் மட்டும் இயங்கவும், உணவகங்களில் ஆன்லைன் சேவைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கொரோனா கட்டுப்பாடுகளை தீவிரமாக கண்காணிக்க மாநிலம் முழுவதும் தடுப்புகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி