மத்தியப்பிரதேச மாநிலம் சத்தர்பூர் அருகே மிகவும் ஆபத்தான மலைப்பாதையில் நடந்தே சென்றே மக்கள் தண்ணீர் எடுத்து வரும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மிகவும் கரடு முரடான அந்த பாதையில் இருந்து சிறிது தவறினால் மரணம் நிச்சயம் என வேதனை தெரிவிக்கும் அந்த மக்கள், நீண்ட மைல் தூரம் நடந்து சென்று பாறைகளில் இருந்து கசியும் நீரை எடுத்து வருவதாக கூறுகின்றனர்.